2026 மார்ச் மாதமளவில் 1,110 பேர் குடும்பநல உத்தியோகத்தர்களாக நியமனங்கள் வழங்கப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்ளபடவுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2,613 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள் மற்றும் விசேட பணிகளுக்காக 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கு பதிலளிக்கு நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்ராணி கிரியெல்ல எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.









