கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாதென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவருக்கு ஓய்வு தேவையென வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த விடயங்களை கருத்திற்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாதென சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் ZOOM தொழில்நுட்பத்தினூடாக ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.









