அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர். உணவு , நீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின்றி இறக்கும் தருவாயிலுள்ள பலஸ்தீனர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியே பேரணி முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியன் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 40 ற்கும் மேற்பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய அவுஸ்திரேலிய மாநில தலைநகரங்களான சிட்னி, பிரிஸ்பேர்ன் மற்றும் மெல்பேர்ன் ஆகிய இடங்களில் இடம்பெற்ற போராட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர். இதேவேளை இஸ்ரேல் யுத்தம் மற்றும் மக்கள் எதிர்நோக்கியுள்ள உணவுப்பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்களை கண்டித்து பல நாடுகளிலும் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








