பிரித்தானியாவில் இலங்கை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கார்டிஃப் பகுதியில் வசித்துவந்த 32 வயதான நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிவர்சைடில் உள்ள தென் மோர்கன் பகுதியில் பெண்ணொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் , பொலிசார் அங்கு சென்றுள்ளனர்.
எனினும் நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல குறித்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பென்ட்வைனைச் சேர்ந்த திசார பெரலகே கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









