மேற்கு சூடானின் அகதிகள் முகாம்களில் கொலரா தொற்று வேகமாகப் பரவிவருவதாகவும் உதவிகளுக்கான பற்றாக்குறை காரணமாக இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூடானின் டார்பூரில் வலயத்திலுள்ள தவிலா எனும் முகாமில் கொலரா வேகமாக பரவிவருவதாகவும் இலட்சக்கணக்கான மக்களுக்கு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரைத் தவிர வேறு எவ்வித மருந்துகளும் வழங்கப்படுவதில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தண்ணீரில் எலுமிச்சையை கலந்து மருந்தாகக் அங்குள்ள மக்கள் அருந்திவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதத்தில் மாத்திரம் தவிலா பகுதியில் 300 சிறுவர்கள் உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் கொலரா நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சூடானின் வடக்கு டார்பர் மாநிலம் முழுவதும்ஈ ஐந்து வயதுக்குட்பட்ட 640,000 கும் மேற்பட்ட குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 30ம் திகதி வரை 80 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக ஐ.நா. புள்ளிவிபர தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.









