பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சதீஷ் கமகே இன்றைய தினம் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு மற்றும் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.









