காஸா நகரை கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. காஸாவின் வடபகுதியில் மேற்கொண்ட தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காஸா நகரில் மாதத்திரம் இஸரேலின் தாக்குதல்களில் 61 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காஸா நகருக்கு வடக்கே நிவாரண உதவிகளை பெற்றுக்கொள்ள காத்திருந்தவர்கள் மீது, இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டினியினால் கடந்த 24 மணித்தியாளங்களில் 03 சிறுவர்கள் உள்ளிட்ட 08 பேர் பலியாகியுள்ளனர்.2023 ஆண்டு ஒக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து பட்டினியினால் 235 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 106 சிறுவர்கள் உள்ளடங்குவதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.









