இலங்கையிலுள்ள இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 01 ம் திகதி முதல் , ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவின் கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்கின்றனர். இலங்கையர்களிடையே நீண்டகாலமாக இவ் யாத்திரைப்பயணம் நடைமுறையிலுள்ளது.
தற்போது ஆண்டுதோறும் 15000 இற்கும் அதிகமான இந்து பக்தர்கள் கலந்து கொள்கின்ற தலயாத்திரை மையமாகவும் சபரிமலை அமைந்துள்ளது.
அதற்கமைய இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இலங்கை இந்து யாத்திரிகர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வழிபாட்டு தரிசிப்பானது, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித தலயாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.









