ரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், ஏனையோர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் 50 பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவிசாவளை முதல் ரத்தினபுரி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும், ரத்தினபுரி முதல் அவிசாவளை நோக்கிப் பயணித்த டிப்பர் ரக லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் ரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.









