Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

கார்த்திகை 27, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய A அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை A  அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

கட்டாரின் தோஹாவில் நடைபெற்ற போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ‘A’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 78 ஓட்டங்களையும்,இறுதி நேரத்தில் அதிரடியை வெளிப்படுத்திய ஷாபாஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.அணித்தலைவர் திலக் வர்மா 53 ஓட்டங்களையும், வைபவ் சூர்யவன்ஷி 27 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்று பங்களிப்பு வழங்கினர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ரவிந்து பெர்னாண்டோ, ஜனித் லியனகே மற்றும் நிபுன் தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் 318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘ஏ’ அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சினெத் ஜயவர்தன மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் அதிரடியான ஆரம்பத்ததை வழங்கினர்.

முதல் விக்கெட்டுக்காக 174 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். சினெத் ஜயவர்தன 62 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 70 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 6 பிரமாண்ட சிக்ஸர்கள் அடங்கலாக 105 ஓட்டங்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடனும் வேகமாகவும் ஆடிய லசித் குரூஸ்புள்ளே 98 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அவர் 107 பந்துகளில் 116 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இந்நிலையில் நிஷான் மதுஷ்க மற்றும் அணித் தலைவர் பவன் ரத்நாயக்க பொறுப்புடன் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இலங்கை அணி 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றிப்பெற்று இறுதி போடடிக்கு தகுதிபெற்றுள்ளது.

முந்தைய செய்தி

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரம்! முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர்!

அடுத்த செய்தி

பணிப்பகிஷ்கரிப்பு குறித்த GMOA ன் தீர்மானம் இன்று

தொடர்புடைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!
அண்மைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!

கார்த்திகை 28, 2026
பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!
அண்மைய செய்திகள்

பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!

கார்த்திகை 28, 2026
கோழியிறைச்சி , முட்டை விலையில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது

கார்த்திகை 28, 2026
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை
அண்மைய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை

கார்த்திகை 28, 2026
Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை
அண்மைய செய்திகள்

Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை

கார்த்திகை 28, 2026
நாட்டில் சீரற்ற வானிலை
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று (28) பலத்த மழை ..

கார்த்திகை 28, 2026
o/l Exam அடுத்த வருடம் மார்ச்  மாதம்..
அண்மைய செய்திகள்

O/l Exam – டிசம்பர் 02 முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை!

கார்த்திகை 28, 2026
கிளிநொச்சி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு – அமைச்சர் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

கார்த்திகை 28, 2026
அடுத்த செய்தி
நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம்

பணிப்பகிஷ்கரிப்பு குறித்த GMOA ன் தீர்மானம் இன்று

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.