முன்னாள் அமெரிக்க இராணுவ மேஜர் ஒருவருக்கு நிறைவேற்றப்படும் மரண தண்டனையைப் பொதுமக்கள் நேரலையில் பார்க்க முடியுமென அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth)தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஃபோர்ட் ஹூட் (Fort Hood) இராணுவ முகாமில் ஆயுதம் ஏந்தாத 13 அமெரிக்க வீரர்களைச் சுட்டுக் கொன்ற நிடால் ஹசன் (Nidal Hasan) என்பவருக்கான மரண தண்டனை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுமென அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது போன்ற குற்றச் செயல்களுக்குக் கடுமையான விளைவுகள் இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர நிறைவேற்றப்படவுள்ள முதலாவது இராணுவ மரண தண்டனையாக, நிடால் ஹசனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுமென பென்டகன் அறிவித்துள்ளது.









