நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அபாயகரமான மட்டத்திலேயே நீடிப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர எச்சரித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 1இ217 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்இ நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55இ406 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளர்களில் 52.5 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
தற்போதைய சூழலில் நுளம்புகளிடையே டெங்கு வைரஸ் வகை 2 மற்றும் வகை 3 (னுநnஎ-2 ரூ னுநnஎ-3) பரவியுள்ளதால்இ நுளம்பு கடிக்கு உள்ளாகுபவர்கள் எளிதில் பாதிக்கப்படுவதாக வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.









