இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.
இதனிடையே கடற்படைத் தளபதியாக செயற்பட்ட அட்மிரல் காஞ்சன பானகொட இன்று முதலாம் திகதி பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.









