Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இலங்கைக்கு மீண்டும் IMF பாராட்டு

ஆடி 1, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இலங்கைக்கு மீண்டும்  IMF   பாராட்டு

பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் இலங்கையின் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றை நாணய நிதியத் தூதுக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கக ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

அண்மைக்கால பேரண்டப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதி  திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
அரசாங்கம் பொருளாதாரத்தை வழிநடத்தும் விதம் சர்வதேச நாணய நிதியத்தின் பெரும் பாராட்டைப் பெற்றதுடன்,  IMF ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் சீர்திருத்தத் திட்டங்களுக்காகத் தீவிரமாக அர்ப்பணிப்புடன் இருப்பதற்கும் தூதுக்குழுவினர் அரசாங்கத்திற்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தங்களது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் உறுதியளித்தனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 07 ஆவது மீளாய்வின் போது,  இலங்கையின் திட்டச் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக மதிப்பீடு செய்யப்படும் என்றும் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்தனர்.
இத்திட்டத்தின் கீழ் இலங்கை பூர்த்தி செய்ய வேண்டிய ஏனைய பொறுப்புகள் இந்த மீளாய்வுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள வெளிப்புற சவால்களை வெல்வதற்கும், நிதி மற்றும் வெளிப்புற ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும்,  மீளெழுச்சித் திறனை வலுப்படுத்துவதற்கும்,  அதே போல் நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் சீர்திருத்த செயல்முறையின் வேகத்தைத் தொடர்ந்து பேணுவது இன்றியமையாதது என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேவேளையில்,  பொருளாதார மீட்சியின் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதுக்கு வழிவகுப்பதே அரசாங்கத்தின் இறுதி நோக்கம் என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

பொருளாதார வளர்ச்சியை,  மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,  அமெரிக்காவின் வரிக் கொள்கைகள்இ ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்தச் சூழ்நிலை உள்ளிட்ட வெளிப்புற அதிர்ச்சிகளால் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும்  பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குக் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன்,  நாட்டை மீட்சிப் பாதையில் உறுதியாகக் கொண்டு செல்வதற்குக் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் மேலும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் பலன்கள் அனைத்து பிரஜைகளையும் சென்றடைவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நீண்ட காலத் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அளவுகோல்களுக்கு இணங்குவது அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும்,  மக்கள் மீது தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தாமல் அவர்களுக்கு அதிகபட்ச பலன்களை வழங்கும் வகையில் அரசாங்கம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே நிலவும் நெருக்கமான மற்றும் சாதகமான உறவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

இத்திட்டத்தை செயல்படுத்தும் ஒட்டுமொத்த காலப்பகுதியிலும் இரு தரப்பினரும் குறிப்பிடத்தக்க நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளதாகவும்,  அந்த பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக சீர்திருத்தத் திட்டத்தை எந்தவொரு தடையுமின்றி சுமூகமாக முன்னோக்கி கொண்டு செல்ல முடிந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன்போதுஇ இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும்,  நாட்டில் நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை உறுதி செய்வதற்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான இரு தரப்பினரதும் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு கலந்துரையாடல் நிறைவுற்றது.

முந்தைய செய்தி

O/L மற்றும் A/L மாணவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை

அடுத்த செய்தி

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்

தொடர்புடைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்
அண்மைய செய்திகள்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம்

ஆவணி 2, 2026
அண்மைய செய்திகள்

ஆவணி 2, 2026
ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
அடுத்த செய்தி
புதிய  கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.