ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கும், இடையில் தொலைபேசி வழியிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கட்டாரின் தற்போதைய சூழல் குறித்து ஜனாதிபதி அநுர குமார கேட்டறிந்துள்ளார்.கட்டார் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் ஈரானிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கையின் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் ஜனாதிபதி அதன்போது வெளிப்படுத்தினார்.
கட்டாரில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் குறித்து மன்னர் அல்தானி, ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்.
கட்டார் எல்லைக்குள் வசிக்கும் அனைத்து தரப்பினரின் பாதுகாப்பிலும் தமது அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் நிலவும் இராணுவ பதற்றங்கள் உலகளாவிய எரிசக்தித் துறை மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்தியுள்ள நேரடித் தாக்கங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் சவால்களை எதிர்கொள்வதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.









