அமரிக்காவில் H1-B விசா கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.
அதற்கமைய அமெரிக்காவில் தொழிலுக்கென செல்லும் வெளிநாட்டவர்கள் இனிவரும் காலங்களில் H1-B விசாவைப் பெற வருடாந்தம் $100,000 செலுத்த வேண்டுமென டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அது தொடர்பான உத்தரவு இன்றுமுதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12 மாதங்களுக்கு குறித்த உத்தரவு அமுலில் இருக்கும்.
அதனையடுத்து குறித்த உத்தரவை நீடிப்பதா? இல்லையா என தீர்மானிக்கப்படுமென அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே H1-B விசாக்களை வைத்திருப்பவர்கள் மற்றும் தற்போது அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் அமெரிக்கா வருவதற்கு குறித்த கட்டணம் அறவிடப்பட மாட்டாது.
எனினும் புதிதாக H1-B விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மாத்திரம் இது பொருந்துமென அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.









