முல்லைத்தீவுஇ ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் 2025 ஆகஸ்ட் 15ம் திகதிஇ வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ள ‘ஹர்த்தால்’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், தனது முழுமையான ஆதரவையும் வழங்குவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதியன்றுஇ முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார். பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்றுஇ அவரது சடலம் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.
நீதி கோரியும் ,இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் , நடைபெறவுள்ள குறித்த ஹர்த்தாலுக்கு, தனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்னரும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.









