ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட , ஏனைய உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
பொலிஸாரின் சில இடமாற்றங்களைச் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில்இ அது தொடர்பிலும் பொலிஸ் ஆணைக்குழுவின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்துவதே கலந்துரையாடலின் நோக்கம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழு தமது செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்க தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடமைகளை சட்டப்பூர்வமாக முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாகச் செயல்பட வேண்டுமெனவும் அதன் நடவடிக்கைகளில் தாக்கமும் செலுத்தப்படாதெனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.









