2027ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த ஆண்டு முதல் நாட்டின் அனைத்து முன்பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2027ஆம் ஆண்டு முதல் முன்பள்ளிகளில் வெவ்வேறு கல்வி முறைகளின் கீழ் கற்பிப்பதற்கு அனுமதி இருக்காது எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்பள்ளிக் கல்வியிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாடு முழுவதும் ஒரே தரத்திலான முன்பள்ளிக் கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் தற்போதைய தேவைகளை கருத்திற்கொண்டு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய மூன்று துறைகளிலும் பாரிய கல்விச் சீர்திருத்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.









