எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் வேலை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்த முன்மொழிவு தொடர்பாக அரசாங்கம் தனது விசேட அவதானத்தைச் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் விநியோகம் தொடர்பான புதிய திட்டங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.









