சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சந்தேக நபரிடம் இருந்து 5,000 போதை மாத்திரைகளும் போதை மாத்திரை விற்பனை மூலம் ஈட்டிய 134,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தெஹிவல பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் வசிக்கும் பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து கல்கிஸ்ஸை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
31 வயதான குறித்த பெண் சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கல்கிஸ்ஸை குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.









