வவுனியா – ஓமந்தை A9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் மரண சடங்கு ஒன்றுக்கு சென்று முல்லைத்தீவு நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கனரக வாகனத்துடனும் மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 13 கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளதாகவும், வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்துள்ளனர்
உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த 33 மற்றும் 30 வயதான இருவரென தெரியவந்துள்ளது.
இதேவேளை காயமடைந்தவர்களில் சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









