தவறிழைக்கும் அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வடகல எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்களை இணைக்கும் செயற்திட்டமொன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொலிஸ் திணைக்களத்தில் தற்போதைக்கு 21 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுகின்றன. எனினும் அதனைக் கருத்திற்கொள்ளாது தவறிழைத்த 300 பொலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுனில் வடகல எச்சரிக்கை விடுத்துள்ளார்.









