மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெற உள்ளன.
இன்று (15) இரவு முதல் கண்டி மஹியாவ பகுதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
நாளை மறுதினம் மாலை 5 மணிக்கு கண்டியில் உள்ள நிட்டவெல குடும்ப மயானத்தில் லொஹான் ரத்வத்தே இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளன.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த லொஹான் ரத்வத்தே கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தனது 57வது வயதில் இன்று காலமானார்.









