Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

போப் லியோவுக்கு வெற்றிகரமாக நுரையீரல் சத்திரசிகிச்சை.

ஐப்பசி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
500 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வு

 

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான 71 வயதுடைய பாப்பரசர் பதினான்காம் லியோவுக்கு, ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட நுரையீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

எனினும், அறுவை சிகிச்சையின்போது அகற்றப்பட்ட நுரையீரல் திசுக்களில் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வத்திக்கான் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

பாப்பரசர் லியோவின் நுரையீரலில் சிறிய கட்டி ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின்போது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய,  ரோமிலுள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், அவரது வலது நுரையீரலின் கீழ்ப்பகுதி அகற்றப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், குறிப்பிடத்தக்க சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அகற்றப்பட்ட திசுக்களின் மருத்துவப் பரிசோதனையில், நுரையீரல் அடினோகார்சினோமா எனப்படும் புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோயின் அடுத்தகட்ட நிலை மற்றும் மேலதிக சிகிச்சைகள் தொடர்பான முழுமையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பாப்பரசர் வைத்தியசாலை அறைக்குத் திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். அவர் சுமார் ஒரு வாரம் வைத்தியசாலையில் தங்கியிருந்து குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அவரது பொதுநிகழ்ச்சிகள் அக்டோபர் 20ஆம் திகதி வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் தென் அமெரிக்க நாடுகளுக்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பயணமும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

முந்தைய செய்தி

ஏர்பஸ் இலஞ்ச வழக்கு: நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!

அடுத்த செய்தி

பாகிஸ்தானில் பாரிய ரயில் விபத்து – பலர் உயிரிழப்பு

தொடர்புடைய செய்திகள்

டிஜிட்டல் பிரிவில் பெண்கள்
அண்மைய செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரம்! முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர்!

கார்த்திகை 26, 2026
யாழ்  – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அண்மைய செய்திகள்

யாழ் – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கார்த்திகை 26, 2026
 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!
அண்மைய செய்திகள்

 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!

கார்த்திகை 26, 2026
உலகையே வியக்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி! அதிரடி துடுப்பாட்டத்தால் புதிய சாதனைகள்!!
அண்மைய செய்திகள்

உலகையே வியக்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி! அதிரடி துடுப்பாட்டத்தால் புதிய சாதனைகள்!!

கார்த்திகை 26, 2026
நோர்வூட்டில்  கெப் வாகனத்திலிருந்து   தவறி விழுந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு!
அண்மைய செய்திகள்

நோர்வூட்டில் கெப் வாகனத்திலிருந்து தவறி விழுந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு!

கார்த்திகை 26, 2026
எகிப்தில் எரிபொருள் பவுசர் கவிழ்ந்து தீப்பற்றியதில் 31 பேர் பலி; 21 பேர் படுகாயம்!
அண்மைய செய்திகள்

எகிப்தில் எரிபொருள் பவுசர் கவிழ்ந்து தீப்பற்றியதில் 31 பேர் பலி; 21 பேர் படுகாயம்!

கார்த்திகை 26, 2026
கரையோர வலயத்தில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

கரையோர வலயத்தில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி எச்சரிக்கை!

கார்த்திகை 26, 2026
‘டித்வா’ அனர்த்தத்தின் ஓராண்டு நிறைவு
அண்மைய செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தின் ஓராண்டு நிறைவு

கார்த்திகை 26, 2026
அடுத்த செய்தி
பாகிஸ்தானில் பாரிய ரயில் விபத்து – பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பாரிய ரயில் விபத்து – பலர் உயிரிழப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check