Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்களுக்கு சேதம்

விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை நீக்கம்

ஐப்பசி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்களுக்கு சேதம்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், மக்கள் பாதுகாப்புத் தேடி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம், ஆரம்பத்தில் ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆகப் பதிவானது. எனினும் ,அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் அதன் அளவை 7.7 அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பனாமாவின் ஹெரேரா மாகாணத்தில் அமைந்துள்ள Pவையடழணய யுசசiடிய என்ற தொலைதூரக் குடியிருப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 12 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.சுமார் 12.6 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 6.6 ரிக்டர் அளவிலான மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பல நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன.நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் பனாமா சிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளன. கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களும் தேவாலயங்களும் பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் பசிபிக் கரையோரப் பகுதிகளுக்கு அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி அபாய எச்சரிக்கையை வெளியிட்டது.

பனாமா, கோஸ்டாரிகா, கொலம்பியா, ஈக்வடோர், பெரு உள்ளிட்ட பல நாடுகளின் கரையோரப் பகுதிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் குறித்த சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பனாமாவின் டோகுமென் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. பின்னர் அவை மீண்டும் வழமைக்குத் திரும்பிள்ளது. பனாமா கால்வாயின் செயல்பாடுகளும் பாதிக்கப்படவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள நில அதிர்வு அதிகம் ஏற்படும் பகுதிகளில் பனாமாவும் அமைந்துள்ளதால்இ அந்நாட்டில் நிலநடுக்க அபாயம் தொடர்ந்து காணப்படுகின்றது.

முந்தைய செய்தி

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!

அடுத்த செய்தி

இலங்கையை வீழ்த்தி முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

தொடர்புடைய செய்திகள்

டிஜிட்டல் பிரிவில் பெண்கள்
அண்மைய செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரம்! முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர்!

கார்த்திகை 26, 2026
யாழ்  – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அண்மைய செய்திகள்

யாழ் – நெடுந்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கார்த்திகை 26, 2026
 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!
அண்மைய செய்திகள்

 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை மகளிர்  அணி   வரலாற்றுச் சாதனை!

கார்த்திகை 26, 2026
உலகையே வியக்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி! அதிரடி துடுப்பாட்டத்தால் புதிய சாதனைகள்!!
அண்மைய செய்திகள்

உலகையே வியக்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி! அதிரடி துடுப்பாட்டத்தால் புதிய சாதனைகள்!!

கார்த்திகை 26, 2026
நோர்வூட்டில்  கெப் வாகனத்திலிருந்து   தவறி விழுந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு!
அண்மைய செய்திகள்

நோர்வூட்டில் கெப் வாகனத்திலிருந்து தவறி விழுந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு!

கார்த்திகை 26, 2026
எகிப்தில் எரிபொருள் பவுசர் கவிழ்ந்து தீப்பற்றியதில் 31 பேர் பலி; 21 பேர் படுகாயம்!
அண்மைய செய்திகள்

எகிப்தில் எரிபொருள் பவுசர் கவிழ்ந்து தீப்பற்றியதில் 31 பேர் பலி; 21 பேர் படுகாயம்!

கார்த்திகை 26, 2026
கரையோர வலயத்தில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

கரையோர வலயத்தில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி எச்சரிக்கை!

கார்த்திகை 26, 2026
‘டித்வா’ அனர்த்தத்தின் ஓராண்டு நிறைவு
அண்மைய செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தின் ஓராண்டு நிறைவு

கார்த்திகை 26, 2026
அடுத்த செய்தி
இலங்கையை வீழ்த்தி முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

இலங்கையை வீழ்த்தி முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check