விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, கண் நோய் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளுக்காக இன்று, கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவருக்குக் கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, நேற்று சிறைச்சாலையின் விசேட மருத்துவரிடம் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரைகளுக்கு அமைய, மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக தேசிய கண் மருத்துவமனையின் விசேட மருத்துவரிடம் அவரை ஆஜர்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.









