ருஹுனு பல்கலைக்கழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், விவசாய பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் முன்னெடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2 வாரங்களில் மட்டும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் உட்பட சுமார் 30 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரஸ் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த இணையவழி கல்வி நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.









