வானில் இன்று இரவு ஒரு அபூர்வமான காட்சியைக் காண முடியும்.
சூரியன் மறையும் நேரத்தில் கிழக்கு வானில் உதித்து, இரவு முழுவதும் தென்பட்டு, சூரிய உதயத்தை ஒட்டி மறையும் வகையில் சனிக்கிரகம் இன்று மிகவும் பிரகாசமாகக் காட்சியளிக்கவுள்ளது.
சனிக்கிரகம் பூமிக்கு மிக அருகில் தோன்றும் ‘எதிர்நிலை’ (Opposition) எனப்படும் நிலையை இன்று அடைகிறது. இந்த நிலையில் பூமி, சூரியனுக்கும் சனிக்கிரகத்துக்கும் இடையில் அமைவதால், சனிக்கிரகம் வழக்கத்தைவிட பிரகாசமாகவும் தெளிவாகவும் தென்படும்.
தொலைநோக்கி இல்லாமலேயே சனிக்கிரகத்தை பிரகாசமான, மஞ்சள் கலந்த நட்சத்திரம் போன்ற ஒரு புள்ளியாகக் காண முடியும். எனினும், அதன் பிரபலமான வளையங்களை தெளிவாகப் பார்ப்பதற்கு தொலைநோக்கி அவசியமாகும்.
இன்றிரவு சூரியன் மறைந்த பின்னர் கிழக்கு வானை நோக்கிப் பார்ப்பதன் மூலம் சனிக்கிரகத்தை அவதானிக்க முடியும். இரவு சுமார் நடுப்பகுதியில் அது வானில் உயரமாகத் தென்படும்.
2026ஆம் ஆண்டில் சனிக்கிரகத்தை அவதானிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுவதால், வானியல் ஆர்வலர்களுக்கு இன்று இரவு சிறப்பான வாய்ப்பாக அமைகிறது.









