சீனாவின் யுனான் மாகாணம், குன்மிங் பகுதியில் மின் கம்பிகளை ஆய்வு செய்ய பாம்பு போன்று கம்பிகளில் ஊர்ந்து செல்லும் ரோபோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மின் கம்பிகளில் ஏற்படும் சேதங்கள் மற்றும் கோளாறுகளை கண்டறியும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் கம்பிகளின் நிலையை ஆய்வு செய்யும் இது, ஆபத்தான உயரங்களில் மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளைக் குறைக்க உதவுகிறது.
மின் பராமரிப்புப் பணிகளில் பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பமாக இந்த ரோபோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.









