நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
நாடு முழுவதும் நிலவும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் விசேட அறிவித்தலொன்றையும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய டெங்கு நுளம்பு பரவலால் மேல் மாகாணமே அதிகளவான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
கொழும்புஇ கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை அதிகாரப் பகுதிஇ மஹரகமஇ பிலியந்தலைஇ ஹோமாகமஇ கடுவலைஇ பொரலஸ்கமுவஇ தெஹிவளைஇ எகொடஉயன மற்றும் கொதடுவ போன்ற பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதானமிக்கவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்லஇ சீதுவைஇ களனிஇ ராகமஇ மினுவாங்கொடைஇ நீர்கொழும்புஇ பியகமஇ வத்தளைஇ கட்டான மற்றும் மஹர உள்ளிட்ட பல பகுதிகளின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் அவதானப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகமஇ ஹொரணைஇ இங்கிரியஇ மத்துகமஇ பாணந்துறைஇ வத்துவைஇ களுத்துறை மற்றும் பாயாகல ஆகிய பகுதிகளின் பிரிவுகள் இதன் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக காலிஇ ஹம்பாந்தோட்டைஇ மாத்தறைஇ கண்டிஇ மாத்தளைஇ இரத்தினபுரிஇ கேகாலைஇ குருணாகல்இ புத்தளம்இ பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இந்த அதிஅவதானப் பட்டியலில் அடங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.









