தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, உறுதியான நிதிசார் மீட்சியைப் பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து, தேசத்தின் மூலோபாய செயற்படுத்துனராக செயலாற்றும் வகையில் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை துரிதமாக மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் நிலையில், தேசத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளை துரிதப்படுத்த SLT-MOBITEL எதிர்பார்ப்பதுடன், சகல துறைகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வலுவூட்டவும் முன்வந்துள்ளது.
நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் உறுதியான இலாபத்தை பதிவு செய்திருந்தமையானது, தேசத்தின் தொழில்னுட்ப கட்டமைப்பு மற்றும் பொருளாதார சுபீட்சம் ஆகியவற்றை வரையறுக்கக்கூடிய டிஜிட்டல் உட்கட்டமைப்பை கட்டியெழுப்பும் நிலைக்கு SLT-MOBITEL ஐ நிலைநிறுத்தியுள்ளது.
அரசாங்க டிஜிட்டல் மயமாக்கலுக்கு வலுவூட்டல்
இலங்கையின் பொதுத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதில் SLT-MOBITEL இன் முக்கியமான பங்களிப்பு என்பது மாற்றத்தின் மையமாக அமைந்துள்ளது. இலங்கை அரசாங்க வலையமைப்பு (LGN) என்பது, நிறுவனங்களுக்கிடையிலான இணைப்புக்கான முதுகெலும்பாகச் செயற்பட்டு, ஒப்பற்ற இணைந்த செயற்பாடுகளுக்கும், அனைத்து மட்டங்களிலும் உள்ள e-ஆளுகைத் தளங்களுக்கும் ஆதரவளிக்கிறது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் SLT-MOBITEL இனால் நிர்வகிக்கப்படும் LGN, உறுதித்தன்மை, பாதுகாப்பு மற்றும் அளவிடும்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்து, தேசத்தின் வளர்ந்து வரும் டிஜிட்டல் நிர்வாக கட்டமைப்பிற்கு ஒரு உறுதியான அடித்தளத்தை உருவாக்குகிறது.
LGN-க்கு ஆதரவாக, SLT-MOBITEL இனால் முழுமையாக நிர்வகிக்கப்படும் Lanka Government Cloud (LGC), ஸ்மார்ட் ஆளுகைக்கான பயன்பாடுகளுக்கு, அளவிடும்தன்மை கொண்ட, எதிர்காலத்திற்குத் தயாரான உட்கட்டமைப்பை வழங்குகிறது. artificial intelligence, big data analytics மற்றும் advanced digital services போன்றவற்றுக்கு LGC ஆதரவளிக்கிறது. அதன்மூலம், அரசாங்க நிறுவனங்கள், மேலும் வினைத்திறன் மிக்க மற்றும் பயனுள்ள பொதுச் சேவைகளை வழங்கக்கூடிய வகையில் தரமுயர்த்தப்படுகின்றன.
SLT-MOBITEL குழுமத் தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில். “SLT-MOBITEL இனால் இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காகவும், நவீன மயப்படுத்துவதற்காகவும் தொடர்ச்சியாக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பெருமளவு முதலீடுகளில் ஃபைபர் வலையமைப்புகள், 4G மற்றும் 5G மற்றும் cloud போன்றன அடங்கியுள்ளதுடன், தேசத்தின் டிஜிட்டல் மாற்றச் செயற்பாடுகளில் முதுகெலும்பாக அமைந்துள்ளன. இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) ஆதரவு மற்றும் வழிகாட்டல்களுக்கு நாம் பெரிதும் நன்றி தெரிவிக்கின்றோம். இந்த மேம்படுத்தல்களை மேற்கொள்வதில் அவர்களுடனான பங்காண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.” என்றார்.
கலாநிதி. டி சில்வா தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “2025 இன் முதல் அரையாண்டு காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வியத்தகு நிதிசார் முன்னேற்றம், SLT-MOBITEL இன் எதிர்காலத்தில் அத்தியாவசியமான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு பதிவு செய்திருந்த ரூ. 323 மில்லியன் இழப்பை, நாம் ரூ. 4.28 பில்லியன் வரிக்குப் பிந்திய இலாபமாக மாற்றியிருந்தோம். வருமானம் ரூ. 55.2 பில்லியனாக உயர்ந்திருந்ததுடன், EBITDA பெறுமதி ரூ. 21.7 பில்லியனாக உயர்ந்திருந்தது. செயற்பாட்டு சிறப்பு மற்றும் ஒழுக்கமான நிர்வாகம் போன்றவற்றினால் இந்த சாதனை சாத்தியமாகியிருந்ததுடன், தேசிய டிஜிட்டல் செயற்பாடுகளை துரிதமான முன்னெடுக்கவும், அடுத்த தலைமுறை தொழில்னுட்பங்களில் முதலீடுகளை மேற்கொள்ளவும், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்துக்கு வலுவூட்டும் உறுதி மொழியை நிறைவேற்றுவதற்கும் எமக்கு வலுச்சேர்த்துள்ளது. எதிர்கால தலைமுறையினரை மேம்படுத்த, உலகத்தரம் வாய்ந்த இணைப்புத்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய, நிலைபேறான வகையில் நிர்வகிக்கப்படும் நிறுவனமான SLT-MOBITEL ஐ மாற்றியமைக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.
5G இன் பலத்தை வெளிப்படுத்தல்
பரீட்சார்த்த செயற்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான கொள்முதல் செயற்பாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து, இலங்கையின் 5G வலையமைப்பை அறிமுகம் செய்ய SLT-MOBITEL திட்டமிட்டுள்ளது. ஒளி்அலைகளின் அலைவரிசைகளின் (spectrum band) மூலோபாய ரீதியிலான ஒன்றிணைப்புகளினூடாக, செம்மையாக்கப்பட்ட வினைத்திறன் வழங்கப்படும் என்பதுடன், ஐந்தாண்டு காலப்பகுதியில் சாதனைமிகுந்த சேமிப்பையும் பெற்றுக் கொடுக்கும். வணிக ரீதியிலான 5G அறிமுகத்தினூடாக, ultra-low latency மற்றும் பாரிய இணைப்புகள் போன்றவற்றினூடாக தொழிற்துறைகளை மாற்றியமைக்கும். அத்துடன், ஸ்மார்ட் நகரங்கள், தன்னியக்கமான கட்டமைப்புகள், IoT உற்பத்தி மற்றும் அசல்-நேர அப்ளிகேஷன்கள் போன்றவற்றுடன், இலங்கையை சர்வதேச டிஜிட்டல் புத்தாக்கத்தில் முன்னிலையில் திகழச் செய்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கும்.
வியாபாரச் சூழலை பரந்துபடுத்தல்
அனைத்து அளவிலான வியாபாரங்களும் உலகத்தரம் வாய்ந்த இணைப்பு மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை அணுகும்போது, டிஜிட்டல் பொருளாதாரம் செழித்து வளரும் என்பதை SLT-MOBITEL உணர்ந்துள்ளது. தொழில்நுட்ப ஆரம்பநிலை நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பாரிய நிறுவனங்கள் உட்பட, தொழில்துறையின் முழு அளவிற்கும் சேவை செய்வதற்காக, வடிவமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட, அளவிடக்கூடிய தீர்வுகளை இந்நிறுவனம் வழங்குகிறது.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் பிரதான செயற்பாட்டாளர்களாக தொழில்னுட்ப ஆரம்பநிலை நிறுவனங்கள் காணப்படுவதுடன், வளர்ச்சியை தூண்டுவதற்கு அவசியமான சகாயமான இணைப்பு, cloud சேவைகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் போன்றவற்றை வழங்கி SLT-MOBITEL ஆதரவளிக்கிறது. இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ள சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் வினைத்திறனான வகையில் போட்டியிடுவதற்கு அவசியமான, சைபர் இணைய பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய தொழில்னுட்பங்கள் போன்றவற்றுடனான டிஜிட்டல் மாற்றியமைப்பு பக்கேஜ்களினூடாக பயன் பெறுகின்றன.
நுண் சிறு நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கான SME Xcelerate, ICT soft bundles போன்ற மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க தீர்வுகளினூடாக SLT-MOBITEL வலுவூட்டுகின்றது. ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு இணைப்புத்திறன், சைபர் இணைய பாதுகாப்பு, cloud மற்றும் டிஜிட்டல் தேவைகள் போன்றவற்றை நிவர்த்தி செய்யும் StartSmart பக்கேஜை வழங்குகிறது. நிறுவனங்கள் மட்டத்தில், அடுத்த தலைமுறை பாதுகாப்பான வலையமைப்பு தீர்வுகள் மற்றும் cloud-native கட்டமைப்புகள் போன்றவற்றை SLT-MOBITEL வழங்கி, வியாபாரங்களுக்கு தம்மை நிலைஉயர்த்திக் கொள்வதற்கும், அப்ளிகேஷன்களை நவீனமயப்படுத்திக் கொள்ளவும், டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கவும் ஆதரவளிக்கிறது.
அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பாரியளவு நிறுவனங்கள் போன்றன வினைத்திறன், உற்பத்தித்திறன் மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளை தூண்டுவதற்கான நிறுவன-தர உட்கட்டமைப்பை பெற்றுள்ளன. SLT-MOBITEL இன் உள்ளடக்கமான வழிமுறையினூடாக, தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படுவதுடன், இலங்கையின் பொருளாதார மாற்றியமைப்பில் சகல துறைகளையும் பங்களிப்புச் செய்வதற்கு வழிகோலுவதாகவும் அமைந்துள்ளது.
தேசிய டிஜிட்டல் சமத்துவத்தை முன்னெடுத்தல்
அனைத்து இலங்கையர்களாலும் தொழில்னுட்பம் அணுகப்படுவது மற்றும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளினூடாக உள்ளடக்கத்திற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு TRCSL இன் தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலைகளை பைபர் மயமாக்கல் திட்டத்தின் கீழ், நூற்றுக் கணக்கான பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனூடாக மாணவர்களுக்கு அதி-வேக, நிலையான மற்றும் பொருடக்கம் வடிகட்டப்பட்ட Fibre-to-the-Home (FTTH) இணைப்பை அணுகும் வசதி வழங்கப்பட்டுள்ளது. “கமட்ட சன்னிவேதனய” (கிராமத்துக்கு தொடர்பாடல்) திட்டத்தினூடாக, கிராமிய பகுதிகளில் இணைப்புத்திறன் மேம்படுத்தப்பட்டு வருவதுடன், வருடாந்தம் விரிவாக்கப்பட்டு, நாட்டின் சகல பாகங்களுக்கும் டிஜிட்டல் வாய்ப்புகள் சென்றடைவதை உறுதி செய்கிறது.
மேலும், இலங்கையின் முதலாவது தேசிய AI Expo மற்றும் மாநாடு 2025 ஆன National AI Expo & Conference 2025 முன்னெடுக்கப்படுவதுடன், 2026 ஆம் ஆண்டுக்காக பிராந்திய நிகழ்வுகள் முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனூடாக நவீன தொழில்னுட்பம் மற்றும் அறிவுக்கு சமத்துவமான அணுகல் வசதியை பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கம்பியில்லா வலையமைப்பு விரிவாக்கத்தினூடாக, பின்தங்கிய சேவைகள் வழங்கப்படாத பகுதிகளில் கவனம் செலுத்தப்படுவதுடன், டிஜிட்டல் பாகுபாட்டை நிவர்த்தி செய்து, பரந்த தேசிய வலையமைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறது. டிஜிட்டல் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களினூடாக, டிஜிட்டல் பொருளாதாரத்தில் இயங்குவதற்கு சமூகங்களுக்கு அவசியமான திறன்கள் பற்றிய விளக்கங்கள் பெற்றுக் கொடுக்கப்படுவதுடன், சகல மக்களுக்கும் பாகுபாடின்றி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.
இந்தச் செயற்பாடுகள் உள்ளடக்கமான வளர்ச்சியை முன்னெடுப்பதிலும், தேசிய டிஜிட்டல் உள்ளடக்கத்தை மேற்கொள்வதிலும் பங்களிப்பு வழங்குவதுடன், இலங்கை டிஜிட்டல் யுகத்தினுள் முன்னேறும் நிலையில், எந்தவொரு சமூகமும் பின்தள்ளப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.
கலாநிதி. மோதிலால் டி சில்வா மேலும் குறிப்பிடுகையில், “SLT-MOBITEL இல், அனைவராலும் தொழில்னுட்பம் அணுகப்பட்டு, பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். டிஜிட்டல் மேம்பாட்டு செயற்பாடுகளினூடாக நாட்டின் சகல நபர்களும் பயன் பெறக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது எமது இலக்காக அமைந்துள்ளது. பாடசாலைகளை பைபர் மயமாக்கல், கிராமிய இணைப்புத்திறன், SME வலுவூட்டல் மற்றும் டிஜிட்டல் அறிவூட்டல் திட்டங்கள் போன்றவற்றினூடாக, முழுத் தேசத்துக்குமான உள்ளடக்கமான டிஜிட்டல் எதிர்காலத்தை நாம் உண்மையில் கட்டியெழுப்புகிறோம்.” என்றார்.
நிலைபேறாண்மை மற்றும் ஆளுகை
SLT-MOBITEL, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) கொள்கைகளை பின்பற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. இது நிலையான வணிக நடைமுறைகள் மற்றும் பெருநிறுவன பொறுப்புணர்வை வழிநடத்துகிறது. அனைத்து நிலைபேறுடைய பரிமாணங்களிலும் பொறுப்புணர்வை நிலைநிறுத்துவதற்கும், முன்னேற்றத்திற்கும், நிறுவனம் அர்ப்பணிக்கப்பட்ட ESG குழுக்களையும், விரிவான கொள்கைகளையும் நிறுவியுள்ளது.
சுற்றுப்புறச் சூழல்சார் செயற்பாடுகளில் புதுப்பிக்கத்தக்க வலு பின்பற்றல்கள், சூரிய வலுவில் முதலீடுகள் மற்றும் காபன் நடுநிலையை எய்தும் மூலோபாய இலக்கு போன்றன அடங்கியுள்ளன. நீண்ட கால தேசிய சுபீட்சத்திற்கு நிலைபேறான உட்கட்டமைப்பு விருத்தி என்பது அவசியமானது என்பதற்கு இந்த முயற்சிகளில் நிறுவனம் அக்கறை காண்பிக்கின்றமை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
2040 ஆம் ஆண்டளவில் பூஜ்ஜிய காபன் வெளியீடுகள் எனும் இலக்கை எய்துவது எனும் ESG இற்கான அர்ப்பணிப்பை SLT-MOBITEL வலிமைப்படுத்திய வண்ணமுள்ளது. புதுப்பிக்கத்தக்க வலு மூலோபாயத்தில் 6,000 kW, 200 கூரை மீதான சூரிய மின் வலுக்கட்டமைப்பு நிலையங்கள் எனும் இலக்கில் ஏற்கனவே 620 kW கொள்ளளவு 2024 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. எஞ்சியவை 2026 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படும். அதனூடாக, வலுத் தேவையின் 10%ஐ புதுப்பிக்கத்தக்க வலுவினூடாக பூர்த்தி செய்யும்.
400 நிலையங்களில் சூரியமின் வலுக்கட்டமைப்பை நிறுவி, 2,300 kW மின்னை பிறப்பிக்கிறது. அதனூடாக வலையமைப்பு தேவையின் 3% ஐ நிவர்த்தி செய்து, காபன் அளவீட்டை மேம்படுத்தி, நிலையங்களின் காபன் வெளியீடுகளையும் கண்காணிக்கிறது.
ஆளுகையை உறுதி செய்யும் வகையில், பணிப்பாளர் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட இலஞ்ச ஒழிப்பு மற்றும் மோசடி தவிர்ப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூரல் போன்றவற்றுக்கான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
SLT-MOBITEL அடுத்த அத்தியாயத்தில் பிரவேசிக்கும் நிலையில், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்துக்கு வலுவூட்டுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது. அதற்காக அனைவருக்காகவும் உள்ளடக்கமான, போட்டிகரமான மற்றும் நிலைபேறான தேசத்தை கட்டியெழுப்பிய வண்ணமுள்ளது.









