2021 ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் ஆரம்பிக்கப்பட்டு பல காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 18 கருத்திட்டங்களில் 06 கருத்திட்டங்களின் பணிகள் தற்போது நிறைவுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வேலைகள் பூர்த்தி செய்யப்படாத திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து அமுல்படுத்த நகர அபிவிருத்தி நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய
வலப்பனை உத்தேச வாராந்த சந்தை மற்றும் பல்நோக்கு கட்டடத்தை நிர்மாணித்தல்
தவுலகல வாராந்த சந்தை மற்றும் வாகனத்தரிப்பிட அபிவிருத்தி
முல்லைத்தீவு பஸ் நிலைய அபிவிருத்தி
ஹபரண சுகாதார நல வசதிகள் மற்றும் நில அலங்காரங்களை மேம்படுத்தல்
றுவன்வெலிசாய தூபி வாகனத்தரிப்பிடத்திலிருந்து ஜேதவனராம தூபி வரைக்குமான நடைபாதை அபிவிருத்தி
பொலன்னறுவை புதிய நகர நிர்வாகக் கட்டிடத்தை நிர்மாணித்தல்
அம்பாறை வாராந்த சந்தை கட்டுமானம்
தெய்யந்தர பஸ் நிலைய அபிவிருத்தி
கம்பஹா பொதுச் சந்தை அபிவிருத்தி
பேரலந்த ஈரநிலப் பூங்கா அபிவிருத்தி
பானந்துறை பொதுச்சந்தை மற்றும் பலநோக்குக் கட்டிடம் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.









