யாழ்ப்பாணம் நல்லூர் திலீபன் நினைவுச் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட தமிழீழ சுயநிர்ணயத்திற்கான இயக்கம் – MSDTE ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம், 10 டவுனிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு, பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் நோக்கி முன்னெடுக்கப்பட்டது.
திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சிலை, செப்டம்பர் 27ஆம் திகதி பொலிஸாரால் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் லண்டன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.









