விசாரணையொன்றுக்காகத் தேடப்பட்டு வரும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பிலேயே குறித்த சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தற்போது தங்களது வசிப்பிடங்களில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை 0718 592 167 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டும் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் வெளியிடப்பட்ட தகவலின்படி தேடப்படும் சந்தேக நபர்களில் ராஜபக்ஷ பத்திரணகே ஹிமாலி செவ்வந்தி, ராஜபக்ஷ பத்திரணகே தரிந்து ஜீவந்த மற்றும் பத்தேகம பத்திரணகே விராஜ் நிமஷ்க ஆகியோர் அடங்குகின்றனர்.
சந்தேக நபர்களின் மேலதிக விபரங்கள் மற்றும் அடையாளத் தகவல்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களைப் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.









