அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS Santa Barbara கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்கென கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Littoral Combat வகைக் கப்பலான ‘USS Santa Barbara’(LCS32), அமெரிக்காவின் 7வது கடற்படைப் படையைச் சேர்ந்த ஒரு கப்பலாகும்.
127.6 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் A. J. OCHS கடமையாற்றுகின்றார்.
‘USS Santa Barbara’ கப்பல் இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அதில் வருகைதந்திருக்கும் குழுவினர் நாட்டின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை USS Santa Barbara கப்பல் எதிர்வரும் 22 ம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.









