அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது. 5 வருடங்கள் ஆட்சி நீடிக்குமென அமைச்சர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணைக்கமைய ஐந்து வருடங்கள் தற்போதைய அரசாங்கம் ஆட்சியை முன்னெடுக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த வினாக்களுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படுமெனவும், ஜனாதிபதியும் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் தற்போதைய அரசாங்கத்தின் சொத்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சிக்குள் எந்தப் பிளவுகளும் இல்லையெனவும், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஒருசில ஊடகங்களின் ஊடாக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுதாகவும் அது அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.









